தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ்; பாகிஸ்தான் பேட்டிங்! - வாகப் ரியாஸ்

நாட்டிங்ஹாம்: உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பாகிஸ்தான் அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

வெஸ்ட் இண்டீஸ்

By

Published : May 31, 2019, 2:57 PM IST

உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

பேட்டிங்கில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால் கடினமான இலக்கு நிர்ணயிக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் அனுபவ வீரர் மாலிக் இடம்பெறாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி விவரம்:

சர்ஃப்ராஸ் அஹ்மத் (கேப்டன்), இமாம் உல் ஹக், பாபர் அசாம், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் சோஹைல், முகமது ஹஃபீஸ், இமாத் வாசிம், ஷடாப் கான், ஹசன் அலி, முகமது ஆமிர், வஹாப் ரியாஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கிறிஸ் கெய்ல், ஹோப், டேரன் பிராவோ, ஹெட்மயர், நிக்கோலஸ் பூரான், ரஸல், ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லி நர்ஸ், காட்ரெல், ஒஷானே தாமஸ்.

ABOUT THE AUTHOR

...view details