தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு - sl

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 44 ஆவது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்.

By

Published : Jul 6, 2019, 4:06 PM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. முதலில் 3-மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள 44 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டர்சேவுக்கு பதிலாக திசாரா பெரேரா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்.

அணிகள் விபரம்:
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ்.

இலங்கை: திமுத் கருணாரத்னே (கே), குசால் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, இசுரு உதனா, கசுன் ராஜிதா, லசித் மலிங்கா.

For All Latest Updates

TAGGED:

indsltoss

ABOUT THE AUTHOR

...view details