உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதன் ஏழாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குலாப்தீன் நைப் பந்துவீச்சைத் தேர்வு செய்து இலங்கை அணியை பேட்டிங் ஆடப் பணித்துள்ளார்.
இன்றையப் போட்டியில் இலங்கை அணியில் ஜீவன் மெண்டிஸ் நீக்கப்பட்டு பிரதீப் இடம்பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.