உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவரில் 330 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளஸிஸ் பொறுப்பான முறையில் பேட்டிங் செய்துகொண்டிருந்தார்.
ஒரு கையில் கேமரா... மறு கையில் சூப்பர் கேட்ச்..! - அசத்திய போட்டோகிராபர்! - உலகக் கோப்பை கிரிக்கெட்
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளஸ்ஸிஸ் சிக்ஸருக்கு அடித்த பந்தை மைதானத்தில் இருந்த கேமராமேன் ஒருவர் ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்தார்.
இந்நிலையில், வங்கதேச பந்துவீச்சாளர் மொசாடெக் ஹூசைன் 25ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டூபிளஸிஸ் கேஷுவலாக விலகிச் சென்று லாங்-ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்தார். அப்போது அந்த பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் ஊடகத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், சிக்ஸர் அடிக்கப்பட்ட பந்தை ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்தார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நேற்றைய போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளித்தது.