தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘நான் எதையும் மறக்கவில்லை’ - தவான் இஸ் பேக்! - இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன்

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன் காயத்திலிருந்து மீண்டதும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடனான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

I don't think like an international star
I don't think like an international star

By

Published : Dec 25, 2019, 11:57 AM IST

இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகர் தவான். இவர் சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரில், காயம் காரணமாக இடம்பெறவில்லை.

அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், தற்போது தொடக்க வீரர் வரிசையில் தவானுக்கு போட்டியாக அமர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா என மேலும் இருவர் தவானின் இடத்தைப் பிடிக்க காத்துக்கொண்டுள்ளனர்.

ஷிகர் தவான் - கே.எல்.ராகுல்

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள தவான், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர் என இரு தொடர்களிலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”வருகிற புத்தாண்டில் புதியதாக களமிறங்கப் போகிறேன். அடுத்தடுத்த காயத்தால் பல்வேறு தொடர்களை இழந்த எனக்கு இது நல்ல செய்திதான். நான் இல்லாத குறையை ராகுல் சிறப்பாக போக்கியதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இனி நான் எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ”விளையாட்டில் காயமடைவது இயற்கைதான். இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். என் விஷயத்தில் இது பெரியளவு பாதிப்பு இல்லை. நான் எப்படி பேட்டிங் செய்வது என்பதை இன்னும் மறந்துவிடவில்லை, வரும் இலங்கைத் தொடரில் வழக்கம் போல ரன்களைக் குவிக்க முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யகுமார் யாதவ் என்ன தப்பு பண்ணாரு; இந்திய தேர்வுக்குழுவிற்கு ஹர்பஜன் சிங் கேள்வி?

ABOUT THE AUTHOR

...view details