இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் துவம்சம் செய்த இங்கிலாந்து அணியும் இந்தியாவைப் போராடித் தோற்கடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
இங்கிலாந்து அணிக்குச் சொந்த மண் என்பதால் கூடுதல் பலம் பொருந்தியதாக இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக உள்ளது. நியூசிலாந்து அணியும் பலம் பொருந்திய அணி தான். ஆனால் உலகக்கோப்பை தொடர் முழுவதும் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாத வகையில் செயல்படும் அணியாகவே திகழ்கிறது. எனவே அவ்வளவு எளிதாக நியூசிலாந்து அணி கோப்பையைக் கொடுத்துவிடாது. இதுவரை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 9 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.