தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு - உலகக் கோப்பைக்கான

மும்பை: உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு; தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு

By

Published : Apr 15, 2019, 8:05 PM IST

12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் அமைந்துள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோர் ஆலோசனையின் கீழ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தோனிக்கு மாற்று விக்கெட்டு கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இந்திய அணியில் விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய மூன்று ஆல்ரவுண்டர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அணியில் கே.எல்.ராகுல் தேர்வாகியுள்ளதால், நான்காவது வரிசையில் அவர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் அணியில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்தில் ஆடுவதற்கு நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கு பதில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் பலமுறை வாய்ப்பு தரப்பட்டு அதனை பயன்படுத்திக்கொள்ளாத ராயுடுவும் அணியிலிருந்து நிக்கப்பட்டுள்ளார்

அணியின் முழு விவரம் இதோ,

அணியின் முழு விவரம் இதோ,

விராட் கோலி(கே), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர்

ABOUT THE AUTHOR

...view details