இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நட்சத்திரமாக திகழ்பவர், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இவர் இன்று (ஜூலை18) தனது 24ஆவது பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடினார்.
இந்நிலையில் மந்தனாவின் பிறந்த நாளுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவற்றுள் சில..,
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்மிருதி மந்தனா. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் பெயரை நிலைநாட்டுங்கள். இந்திய அணியில் இடது கை வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என்ற நற்பெயரையும் காப்பாற்றுங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.