தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியின் அக்ரஸிவ்; முடிவை மாற்றிய அம்பயர்...! - Chennai Super Kings

துபாய்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி கோபமடைந்ததால், நடுவர் தன் முடிவை மாற்றிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

wide-or-not-umpire-changes-mind-after-dhonis-angry-gesture
wide-or-not-umpire-changes-mind-after-dhonis-angry-gesture

By

Published : Oct 14, 2020, 5:03 PM IST

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், ப்ளே ஆஃப் வாய்ப்பை தற்காத்துக் கொண்டுள்ளது. அந்தப் போட்டியின் 19ஆவது ஓவரை தாகூர் வீசினார். அதில் ஒரு பந்து அகலப் பந்தாக செல்ல, நடுவர் அகலப் பந்து என அறிவிக்க கைகளைத் தூக்கினார்.

ஆனால் அதற்கு தோனி கோபத்துடன் நடுவரிடம் விண்ணப்பிக்க, நடுவர் ரைஃபெல் தனது கைகளை கீழே இறக்கினார். இதனால் அதிர்ந்த ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், ஓய்வறையில் கோபமடைந்தார்.

தோனியின் அக்ரஸிவ்

இதேபோல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது நோ - பால் பற்றிய அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டதால் தோனி களத்திற்குள் இறங்கியது சர்ச்சையானது. இம்முறை தோனியின் கோபத்தால் நடுவர் முடிவை மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் கூல் என ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி, நேற்றைய போட்டி முழுவதும் கோபத்துடன் காணப்பட்டதும் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: களமிறங்க தயாரான கெய்ல் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details