வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாளில் 297 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் தொடர்களுக்குப் பின் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்துள்ளது.
ஆன்டிகுவாவிலுள்ள சர் விவன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அப்போது ரிஷப் பந்த் 20, ஜடேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, புஜாரா, கேஎல் ராகுல் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ரஹானா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்த் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சீராக ஆடி வந்த ஜடேஜா அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
Ravindra Jadeja and Ishanth sharma crucial partnership சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜடேஜா ஹோல்டர் பந்தில், விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் உணவு இடைவெளிக்கு முன்னர் 96.4 ஓவர்களில் 297 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Kemar Roach picks 4 wicket against India வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச் 4, கேபிரல் 3, சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.