தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்காது - விக்ரம் ரத்தோர்! - ஸ்ரேயாஸ் ஐயர்

ஹாமில்டன்: டி20 உலகக்கோப்பையில் ஆடும் இந்திய அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

we-know-the-core-members-for-t20-world-cup-vikram-rathour
we-know-the-core-members-for-t20-world-cup-vikram-rathour

By

Published : Jan 28, 2020, 4:02 PM IST

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு போட்டிகளிலும் இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் இந்திய அணியின் நீண்ட கால பிரச்னையாக இருந்த நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரருக்கான பிரச்னை ஸ்ரேயாஸ் மூலம் தீர்ந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உலகக்கோப்பைக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக பொறுப்பேற்ற விக்ரம் ரத்தோர் பேசுகையில், '' டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கும், தற்போது ஆடும் இந்திய அணிக்கும் பெரிய மாற்றங்கள் இருக்காது. சிறு மாற்றங்கள் மட்டுமே இருக்கும்.

விக்ரம் ரத்தோர்

நடுவரிசை வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நிச்சயம் இந்திய அணிக்கான மேட்ச் வின்னராக வருவார். இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் என்னை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்துகின்றனர். கிடைக்கும் சிறு வாய்ப்புகளிலேயே தங்களை நிரூபித்துள்ளனர்.

இந்தத் தொடரில் ஆடும் இந்திய வீரர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டால், இந்திய ஏ அணியில் ஆடும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களும் நியூசிலாந்து ஆடுகளங்களில் ஆடியுள்ளதால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள். இந்தத் தொடரை இந்திய அணி எளிதாகக் கைப்பற்றும்'' என்றார்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு ஒருநாள் போட்டிகள் பயன்படும்: ரவி சாஸ்திரி

ABOUT THE AUTHOR

...view details