தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் போட்டிக்கு தயார்

துபாய்: அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதால் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியை விளையாட தயாராக உள்ளதாக முகமத் நபி கூறியுள்ளார்.

தயார்

By

Published : Mar 19, 2019, 12:19 PM IST

அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வெற்றி அடைந்ததன் மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடி விரைவாக முதல் வெற்றியை கண்ட சாதனையில் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி கூறுகையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி அடைந்ததன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க பெருமை ஆப்கானிஸ்தான் அடைந்துள்ளதாகவும், தங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக ரஹ்மத் ஷா, ஹிசானுல்லா சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளனர் என்றார்.

ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் வெற்றியில் மிகப்பெரிய பங்கினை ஆற்றியுள்ளார் என கூறியுள்ளார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் தங்கள் அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் அவர்கள்(இந்தியா) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்திலிருந்து சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியதால்தான் என கூறினார்.

மேலும் கூறுகையில், இந்திய அணி சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக பல காலமாக இருந்துவருவதால் தங்கள் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை எனவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details