உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்முறை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் வரும் 30ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை ஜுன் 22 ஆம் தேதி ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்க உள்ளது.
48 மணிநேரத்தில் காலியான இந்தியா-பாக். உலகக் கோப்பை டிக்கெட்டுகள் - டிக்கெட் விற்பனை
மான்செஸ்டர்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை 48 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது.
இரு அணிகள் மோதினால் அந்த அணிகளின் நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் அந்த போட்டியின் மீதே இருப்பது வழக்கம். இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வென்றதில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் 48 மணிநேரத்திற்குள் தீர்ந்துவிட்டதாக லான்கசைர் கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போது, அதை ஒரு யுத்தமாகவே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.