டிஎன்பிஎல் டி20 தொடரை காண சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுத்துள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் டிஎன்பிஎல் போட்டிகளை தொகுத்து வழங்க வழங்க தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
திருக்குறளை தமிழில் கூறி அசத்திய வாட்சன்; வைரலாகும், வீடியோ! - CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் தமிழில் திருக்குறள் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
wattu
இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ள வாட்சன், கன்னியாகுமரியில் உள்ள புகழ் வள்ளூவர் சிலையினை பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் குறித்து புகழ்ந்து பேசியும், திருக்குறளின் முதல் குறளை தமிழில் கூறியும் அசத்தியுள்ளார்.
இந்த காணொலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் இது ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.