இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டார். இந்தப் போட்டிக்கு ஹர்பஜன் வர்ணனையாளராக செயல்பட்டார். அப்போது மைதானத்திலிருந்த ஜர்பஜன் சிங் இந்திய வீரர்களைப் பார்க்க வந்தபோது, விராட் கோலி ஹர்பஜன் சிங் எப்படி ஓடி வந்து பந்துவீசுவாரோ, அதேபோல் முயன்று பந்துவீசினார். பின்னர் ஹர்பஜன் சிங் களத்தில் எப்படி செயல்படுவாரோ அதேபோல் செயல்பட்டார்.