2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராம் என்னும் மாற்றுத்திறனாளி சிறுவன், இரண்டு கால்கள் முடங்கியிருந்த போதிலும் பேட்டிங் செய்தது மட்டுமில்லாமல் தவழ்ந்துகொண்டே ரன்களையும் எடுத்தார்.