சென்னை-சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 200 இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 265 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முறியடித்துள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.
இது குறித்து பேசிய அஸ்வின், “2000ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் இந்திய அணியில் விளையாடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் நான் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளராக மாறுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஏனெனில், எனது மாநில அணியில் நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்தேன்.