உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு, இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 25ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக, பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவருகின்றனர். அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, ஊரடங்கு உத்தரவின் போது கிடைக்கும் நேரத்தை தனது உடலை சரிசெய்யப் பயன்படுத்திக்கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.