தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசியின் புதிய வழிமுறைகள்: அதிருப்தியில் முன்னாள் வீரர்கள்! - ஆகாஷ் சோப்ரா

கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் ஐசிசி சார்பாக வெளியிடப்பட்ட வழிமுறைகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

watch-former-cricketers-are-not-happy-with-iccs-back-to-cricket-guidelines
watch-former-cricketers-are-not-happy-with-iccs-back-to-cricket-guidelines

By

Published : May 26, 2020, 4:34 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடந்து மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், ''ஒவ்வொரு கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும் அனைத்து வீரர்களும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் வீரர்கள் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வீரர்களுக்கு நடுவில் சமூக இடைவெளி இருக்க வேண்டும், பயிற்சியின்போது வீரர்கள் தங்களது சொந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

ஐசிசியின் புதிய வழிமுறைகள்: அதிருப்தியில் முன்னாள் வீரர்கள்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், ''வீரர்களைத் தனிமைப்படுத்துவது, கரோனா பரிசோதனை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சூழலை இன்னும் கடினமாக்கும். இதன்மூலம் தனிமைப்படுத்துவதன் தேவை கேள்விக்குள்ளாகும்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த விஷயம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் பல நாள்கள் எடுக்கும். ஆனால் கரோனா வைரஸ் சூழலால் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என தெரியாத நிலையில், எதற்காக ஐசிசி வழிமுறைகளை அறிவித்துள்ளது என்பது தான் கேள்வியாக உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:ஒருநாள் போட்டியில் முற்சதம் விளாசிய முதல் ஜோடி! #Onthisday

ABOUT THE AUTHOR

...view details