தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வாசிம் அக்ரமின் புகைப்படத்தைப் பார்த்து திகைத்துப்போன அவரின் மனைவி! - தொலைக்காட்சி வருணனையாளர் கவுதம் பீமணி

பாகிஸ்தான் அணி 1987ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹோலி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது இப்புகைப்படம் என்று வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

வாசிம் அக்ரமின் புகைப்படத்தைப் பார்த்து திகைத்துப்போன அவரின் மனைவி
wasim-akrams-1987-holi-photo-leaves-wife-shaniera-stunned

By

Published : Mar 30, 2021, 11:01 PM IST

லாகூர்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 1987ஆம் ஆண்டில் இந்தியாவில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹோலி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், அதைப் பற்றி வாசிமும் அவரின் மனைவியும் ட்விட்டரில் பதிவிட்ட உரையாடல் தற்போது வைரலாகிவருகிறது.

வாசிம் அக்ரமின் மனைவி ஷனீரா, "இன்று ட்விட்டரைத் திறந்தவுடன் நான் முதலில் பார்த்தது என் கணவர் உள்ளாடைகளில் உள்ள ஒரு புகைப்படம்!? இது என்ன விநோதம்?" என்று அக்ரமை கலாய்த்துப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு வாசிம், "இது மிகவும் சாதாரணம் அன்பே, மேலும் உன் கூடுதல் தகவலுக்கு அதன் பெயர் அப்போதிருந்தே ஷார்ட்ஸ்தான்" என்று பதிலளிக்க இதைப் பலரும் ட்விட்டரில் பகிர்ந்துவருகின்றனர்.

இப்புகைப்படத்தில் வாசிம் அக்ரம் உடனிருப்பது தொலைக்காட்சி வர்ணனையாளர் கவுதம் பீமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2021: டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த்

ABOUT THE AUTHOR

...view details