தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடமல் பும்ரா ஓய்வெடுக்க வேண்டும்' - வாசிம் அக்ரம் - பும்ராவுக்கு அக்ரம் அறிவுரை

கவுண்டி கிரிக்கெட் ஆடுவது பும்ராவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தாலும், அவர் முடிந்த அளவிற்கு ஓய்வெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் அறிவுரை தெரிவித்துள்ளார்.

wasim-akram-advices-jasprit-bumrah-to-choose-rest-over-county-cricket
wasim-akram-advices-jasprit-bumrah-to-choose-rest-over-county-cricket

By

Published : May 11, 2020, 3:09 PM IST

கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் தங்களது நாஸ்டால்ஜியா (முன்னாள் நடைபெற்ற நிகழ்வு) சம்பவம் பற்றியும், தற்போதைய கிரிக்கெட் சூழல்கள் பற்றியும் ஆன்லைன் நேர்காணல்களில் கூறிவருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நேர்காணல் செய்தார்.

அதில், ''தற்போதைய சூழலில் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் டி20 ஆட்டத்தை வைத்து நான் மதிப்பிடுவது இல்லை. அவர்களின் டெஸ்ட் பந்துவீச்சை வைத்து மட்டுமே மதிப்பிட்டு வருகிறேன். இந்திய அணி எப்போதும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும். இந்திய அணியின் தலைசிறந்த பவுலர் யார் என்றால் நிச்சயம் பும்ரா தான். அவருக்கு எனது அறிவுரை என்னவென்றால், அவர் அதிகமாக ஓய்வு எடுக்க வேண்டும்.

வாசிம் அக்ரம்

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றால் அவரின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்றாலும், ஓய்வெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. கிரிக்கெட் இல்லாத நேரங்களில் அவருக்கு ஓய்வு நிச்சயம் கொடுக்க வேண்டும்.

எனது காலத்தில் நான் ஆறு மாதம் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் ஆடுவேன். மீதமுள்ள ஆறு மாதம் லான்சாஷையர் அணிக்காக கிரிக்கெட் ஆடுவேன். ஆனால் இப்போது வீரர்கள் அவ்வாறு விளையாடக் கூடாது. இளைஞர்கள் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். டி20 கிரிக்கெட் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்கு தான். அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதிக பணம் கிடைக்கிறது. விளையாட்டிற்கும், வீரர்களுக்கும் நிச்சயம் பணம் தேவை. ஆனால் கிரிக்கெட் வீரர்களின் திறமை முழுமை பெற வேண்டும் என்றால், அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:மங்கூஸ் பேட்டை பயன்படுத்த வேண்டாம் - ஹெய்டனுக்கு அறிவுரை கூறிய தோனி!

ABOUT THE AUTHOR

...view details