ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பிரிஸ்பேன் கபா மைதானத்தில் பதிவுசெய்தது. ஆதலால் அந்த மைதானத்தின் பெயரான 'கபா'-வையே தனது செல்லப்பிராணிக்கும் பெயரிட்டுள்ளதாக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் சுந்தர் பதிவிட்டுள்ளார்.
கபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் என்ற இலக்கை அடைந்து, கடந்த 32 ஆண்டுகளில் கபாவில் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. வாஷிங்டன் சுந்தர் அந்த டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமாகி, அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார்.
முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, 62 ரன்கள் எடுத்தார். இரண்டாம் இன்னிங்ஸில் ஆறாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்து 29 பந்துகளில் அவர் எடுத்த 22 ரன்களே அணியைச் சரிவிலிருந்து மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:IPL 2021: தோனிபோல் யாராலும் இருக்க முடியாது, என்னைப் போல் நான் இருக்க விரும்புகிறேன் - சாம்சன்