தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'உலகக்கோப்பைத் தொடரின்போது எனது கை உடைந்திருக்க வேண்டும் என எண்ணினேன்!'

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது எனது கை காயம் காரணமாக உடைந்திருக்க வேண்டும் என எண்ணியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

was-hoping-my-arm-was-broken-during-world-cup-glenn-maxwell-on-his-struggles-with-mental-health
was-hoping-my-arm-was-broken-during-world-cup-glenn-maxwell-on-his-struggles-with-mental-health

By

Published : Mar 26, 2020, 8:18 AM IST

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் சில மாதங்களுக்கு முன்பு மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் பிக் பாஷ் தொடரின்போது மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய மேக்ஸ்வெல், பல வகையில் அணிக்கு நம்பிக்கை அளித்துவருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து சில காலம் விலகியது பற்றி மேக்ஸ்வெல் மனம் திறந்துள்ளார். அதில், ''எனக்கும், ஷான் மார்ஷுக்கும் உலகக்கோப்பைத் தொடரின்போது காயம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகத்தான் மருத்துவமனை சென்றோம். அங்கே பரிசோதனை அறிக்கையில், எங்களுக்கு காயம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று நினைத்தோம். கிரிக்கெட்டிலிருந்து எனக்கு சிலகாலம் ஓய்வு தேவைப்பட்டது.

எனக்கு அந்த நேரத்தில் யார் மீதும் கோபம் வரவில்லை. என் மீது மட்டுமே கோபம் வந்தது. உலகக்கோப்பைத் தொடரின்போது என்னால் சிறப்பாக ஆட முடியவில்லை. உலகக்கோப்பைத் தொடரிலிருந்து தப்பிப்பதற்கு காயம்தான் எளிதான வழி என்று நம்பினேன்.

அக்டோபர் மாதம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தபோதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. 2-0 என்று அந்தத் தொடரில் முன்னிலைப் பெற்றபோதும், அணியிலிருந்து நான் விலக நினைத்தேன். இதைப்பற்றி எங்கள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் பேசினேன்.

எனது நிலைப் பற்றி அணியிடம் கூறினால், அவர்களையும் அது பாதிக்கும். அதனால் ஃபின்சிடம்கூட என்னால் கூற முடியவில்லை.

சில நாள்கள் கடந்தபின், எனது கேப்டன் ஃபின்சிடம் சென்று, சில காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன் என்றேன். அதற்கு அவர், 'தைரியமான முடிவு' என்றார்.

என்னைவிட்டு அனைவரும் சென்றபின், தனிமையில் அழத் தொடங்கிவிட்டேன். உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் முதல்முறையாக நான் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். அடுத்த இரு நாள்கள் எனது மனநிலை மோசமாக இருந்தது. அந்த ஆறு மாதங்களும் அவ்வாறுதான் சென்றன.

என்னால் பலரும் சோகமடைந்தார்கள். அப்போது நான் மிகவும் எளிதான வாழ்க்கையை வாழ முடிவுசெய்து-விட்டதாக உணர்ந்தேன். நான் என்ன செய்கிறேன் என்றும் எனக்கே தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்குப் பின் பிபிஎல் தொடரில் பங்கேற்ற மேக்ஸ்வெல், அந்தத் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மூன்று வருட காதல்... இந்தியன் ஸ்டைலில் நிச்சயதார்த்தம் செய்த ஆஸி., வீரர்!

ABOUT THE AUTHOR

...view details