தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் ரிவர்ஸ் கேரம் பந்துகளைதான் வீசினேன்: அஸ்வின் - ஐபிஎல் 2020

கடந்த ஐபிஎல் தொடரில் கேரம் பந்துகளை வீசியதாக நினைக்கிறார்கள். ஆனால் நான் ரிவரஸ் கேரம் பந்துகளைதான் வீசினேன் என இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ரகசியத்தை உடைத்துள்ளார்.

was-bowling-reverse-carrom-in-2019-ipl-ashwin
was-bowling-reverse-carrom-in-2019-ipl-ashwin

By

Published : May 3, 2020, 2:06 PM IST

கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனிடையே வீரர்கள் அனைவரும் தங்களுடைய விளையாட்டு அனுபவங்களை நேர்காணல் மூலம் வீடியோவில் தெரிவித்துவருகின்றனர்.

இதில் தனியார் கிரிக்கெட் இணையதளப் பக்கத்திற்காக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், சஞ்சய் மஞ்ரேக்கர் எடுத்த நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அதில் பல்வேறு அனுபவங்களைக் கூறியதுடன், ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களின் எதிர்காலம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

அதில், ''நான் டி20 கிரிக்கெட்டை சிறப்பாக ஆடுகிறேன். எனது உடல்நிலை மோசமானால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கப்படுவேன் என நினைக்கிறேன்.

அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாள்களாகக் குறைப்பது என்பது டெஸ்ட் போட்டிகளின் முக்கிய பகுதியை நீக்குவது போன்றது. ஒரு ஸ்பின்னராக எனக்கு அதில் உடன்பாடில்லை.

நான் துல்லியமாக பந்துவீசுவதற்கு மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராமன் முக்கியக் காரணம். நான் ஒவ்வொரு முறை பயிற்சியில் இருக்கும்போதும், நீ பேட்ஸ்மேனுக்கு பந்துவீசும்போது பேட்டின் மேல் பகுதியில் பந்து படாவிட்டால் நல்ல சுழற்பந்துவீச்சாளராக வரமுடியாது என அவர் கூறுவார். ஒவ்வொரு முறை நான் பந்துவீசும்போதும் என் தலையில் அவர் சொன்ன விஷயம் ஓடிக்கொண்டே இருக்கும்.

புதிய பந்துகளில் பந்துவீசுவது எப்போதும் எனக்கு பிடித்த விஷயம். ஏனென்றால் ரிவர்ஸ் பந்துகளை வீசுவது எனது பலம். புதிய பந்துகளில் ரிவர்ஸ் செய்தால், பிட்ச்களும் சரியாக உதவி செய்யும். புதிய பந்துகளில் ஆர்ம் பந்துகளையும் வீச முயற்சி செய்வேன். ஏனென்றால் அது பேட்ஸ்மேன்களை அக்ராஸ் தி லென்த் (across the length) ஆட தூண்டும். புதிய பந்துகளை வீசும்போது ஆட்காட்டி விரலை விடவும் நடு விரலைதான் அதிகம் பயன்படுத்துவேன். அதேமாதிரி பழைய பந்தில் வீசினால் ஆட்காட்டி விரலைதான் பயன்படுத்துவேன். சில நேரங்களில் பேட்டின் மேல் பகுதியில் பந்தை வீச வேண்டும் என்றால் ஆட்காட்டி விரைலைப் பயன்படுத்த மாட்டேன்.

அஸ்வின்

கடந்த ஐபிஎல் தொடரின்போது நான் வீசிய பந்துகளை பேட்ஸ்மேன்கள் கணிக்காமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. அனைவரும் நான் கேரம் பந்துகளை வீசினேன் என நினைத்தார்கள். ஆனால் நான் ரிவர்ஸ் கேரம் பந்துகளைதான் வீசினேன். அந்தப் பந்துகள் பிட்ச்சிலிருந்து வெளியே செல்லும். சில நேரங்களில் அந்தப் பந்துகள் ஸ்பின் ஆகும். சில நேரங்களில் ஆகாது.

கை மணிக்கட்டை வைத்து வீசும் பந்துகளை பேட்ஸ்மேன் சந்திக்கக் கடினமாக இருப்பதற்கு காரணம், பிட்ச் செய்யும் இடத்தால் என்பதை விட, எந்த பந்துகள் எப்படி திரும்பும் எனத் தெரியாததால்தான்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தோனிதான் எனக்கு வழிகாட்டி - ரிஷப் பந்த்

ABOUT THE AUTHOR

...view details