ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வார்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இதனிடையே வார்னே சமீபத்தில் தனது பச்சை நிற டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியை இணையத்தில் ஏலத்தில் விடுவதாக அறிவித்தார். மேலும் அதில் கிடைக்கும் பணத்தை முழுவதுமாக ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிப்புக்கு, நிவாரணமாக அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன ஷேன் வார்னேவின் தொப்பி
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தனது தொப்பியை ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த தொகையை ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நிவாரணம் வழங்கியுள்ளார்.
Warne
இதனிடையே வார்னேவின் தொப்பியை ஒருவர், ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் நான்கு கோடிக்கும் அதிகமான தொகையாகும். முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு விலை போனதே அதிமான ஒன்றாக இருந்தது. தற்போது அதை வார்னே முறியடித்துள்ளார்.
Last Updated : Jan 11, 2020, 2:35 PM IST