2019ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை என இந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில், நான்கு இங்கிலாந்து வீரர்கள், மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள், இரண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள், ஒரு நியூசிலாந்து வீரர், ஒரு இந்திய வீரர் என 11 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இந்தியாவின் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அணி முழுக்க 2010 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019 டிசம்பர் 23ஆம் தேதி வரை, இந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களைக் கணக்கிட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் ஆறு பேட்ஸ்மேன்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் அணி வீரர்கள்
- அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) - 111 போட்டிகள், 8818 ரன்கள், 23 சதம்
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 82 போட்டிகள், 7009 ரன்கள், 23 சதம்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 77 போட்டிகள், 6370 ரன்கள், 21 சதம்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 71 போட்டிகள், 7072 ரன்கள், 26 சதம்
- விராட் கோலி (இந்தியா , கேப்டன்) - 84 போட்டிகள், 7202 ரன்கள், 27 சதம்
- டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா, விக்கெட் கீப்பர்) - 60 போட்டிகள், 5059 ரன்கள், 13 சதம்
- பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 59 போட்டிகள், 3738 ரன்கள், 8 சதம், 138 விக்கெட்டுகள்
- ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா) - 59 போட்டிகள், 267 விக்கெட்டுகள்
- ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 110 போட்டிகள், 398 விக்கெட்டுகள்
- நாதன் லயான் (ஆஸ்திரேலியா) - 94 போட்டிகள், 376 விக்கெட்டுகள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து ) - 105 போட்டிகள், 427 விக்கெட்டுகள்
இதையும் படிங்க:போட்டிபோட்டு சாதனைகள் படைத்த 'ஹிட்மேன்' ரோஹித், 'கிங்' கோலி!