இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் யு-19 காலத்திலிருந்து ஒன்றாக தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர்கள். உலகின் தலைசிறந்த வீரர்களாக உள்ள இருவரும், நியூசிலாந்து தொடரின் போது நெருங்கி பழகி நண்பர்கள் ஆனார்கள்.
கோலியை புகழும் வில்லியம்சன்...! - வில்லியம்சன்\
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி பற்றி வில்லியம்சன் பேசியுள்ளார். அதில், '' கிரிக்கெட்டின் தூதுவராகவும், சாதனைகளை தகர்ப்பவராகவும் உள்ளவர் விராட் கோலி. அவருக்கு பின் பேட்ஸ்மேன்களுக்கு என சில தர நிர்ணயம் ஏற்பட்டுள்ளது. அவ்வளவு ரன்களை சேர்ப்பதற்கு, முதிர்ச்சி தேவை.
அவர் முதிர்ச்சியும், திறனும் இயற்கையாக பெற்றவர் என்றாலும், அவர் அளவிற்கு கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசியுடன் யாருமில்லை. நாங்கள் இருவரும் எதிர் எதிர் அணிகளில் ஆடுவது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.