கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், '' உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது'' என்றார்.
அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் என சிறப்பாக அமைந்தது.
தற்போது 2019ஆம் ஆண்டில் சிறப்பாக ஆடிய வீரர்களைத் தேர்வு செய்து ஐசிசி விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனோடு சேர்த்து ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் அணி: மயாங்க் அகர்வால், டாம் லாதம், மார்னஸ் லபுசானே, விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், வாட்லிங் (வி.கீ), பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், வாக்னர், நாதன் லயன்.