தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின், சேஸ் மாஸ்டர் என ரசிகர்களால் அழைக்கப்படுவர் இந்திய அணியின் கேப்டன் கோலி. 2008இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கோலி, தனது அதீத வளர்ச்சியால் இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனிடையே கோலி பங்கேற்ற 241 ஒருநாள் போட்டி இதுவாகும். இதன் மூலம், டெஸ்ட், ஒருநாள், டி20 என 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய எட்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதேசமயம், 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 33ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால் இத்தகைய பெறுமைக்குறிய இப்போட்டியில் அவர் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.