தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அக்ரம், வாக்கர், வார்னே ஆகியோரை எதிர்த்து விராட் ஆடியிருந்தால்...!

வாசிம் அக்ரம் , வாக்கர் யூனுஸ், வார்னே ஆகியோரின் காலத்தில் விராட் கோலி ஆடியிருந்தால், அவர்களின் சவாலை அதிகமாக ரசித்திருப்பார் என பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

virat-kohli-and-i-would-have-been-real-enemies-on-the-field-shoaib-akhtar
virat-kohli-and-i-would-have-been-real-enemies-on-the-field-shoaib-akhtar

By

Published : May 26, 2020, 3:21 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர். இவரின் வேகத்திற்காக அறியப்பட்டு வரும் சோயப் அக்தர் விராட் கோலியின் ஆட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''விராட் கோலி எனது காலத்தில் ஆடியிருந்தால் நாங்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்திருப்போம். ஆனால் களத்தில் நிச்சயம் எதிரியாக ஆடியிருப்போம். நான் கோலிக்கு தலைவலியைக் கொடுத்திருப்பேன். எனது பந்துகளில் கட் ஷாட்டோ, புல் ஷாட்டோ ஆடியிருக்க முடியாது எனக் கூறியிருப்பேன்.

விராட் கோலி

வேகமாக பந்துகளை வீசி நிச்சயம் கவர் ட்ரைவ் ஆடுவதற்கு அதிகமாக தூண்டியிருப்பேன். களத்தில் தொடர்ந்து சீண்டி, அவரின் கவனத்தை சிதறடித்திருப்பேன். ஆனால் அவரை சீண்டும் போது இன்னும் அதீத கவனத்துடன் ஆடுவது என்னை இன்னும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவர் எந்த காலத்தில் ஆடியிருந்தாலும் இப்போது குவிக்கும் ரன்களை அவர் தொடர்ந்து குவித்திருப்பார்.

என்னைப் பொறுத்தவரை வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ், வார்னே ஆகியோரை எதிர்த்து விராட் கோலி ஆடியிருந்தால், அவர்களின் சவாலை அதிகமாக ரசித்திருப்பார்'' என்றார்.

இதையும் படிங்க:ஹெராயின் வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

ABOUT THE AUTHOR

...view details