2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியில் நான்காவது வீரராகக் களமிறங்கி வந்த தமிழ்நாட்டு வீரர் விஜய் சங்கர், கடந்த ஜூன் 19 ஆம் தேதி வலைப்பயிற்சி செய்யும்போது காலில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விஜய் சங்கர் விலகினார்.
உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த மயங்க் அகர்வால்! - Mayank Agarwal
உலகக்கோப்பை இந்திய கிாிக்கெட் அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை அணியில் மயங்க் அகர்வால்
தற்போது அவருக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.