தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

3ஆவது டி20 கிரிக்கெட் - ரசிகர்களை ஈர்க்க புதிய முயற்சியில் இறங்கிய விதர்பா! - 100 டிக்கெட்டுகளை மாற்றுத் திறனாளிகளுக்கும்

நாக்பூர்: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டிக்கான 4,400 டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக விதர்பா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Ind vs Ban 3rd T20

By

Published : Nov 9, 2019, 12:52 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் முதல் போட்டியை வங்க தேச அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலையைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே தொடரை வெல்வது யார் என்ற பலத்த எதிர்பார்புடன் நாளை நாக்பூரிலுள்ள விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மூன்றாவது டி20 போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ரசிகர்களை ஈர்க்க விதர்பா கிரிக்கெட் சங்கம் ஒரு புது முயற்சியையும் கையாண்டுள்ளது.

அம்முயற்சியானது நாளையப் போட்டிக்கான 4,400 டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்களுக்காகவும், 100 டிக்கெட்டுகளை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கவுள்ளதாக விதர்பா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இத்தகவலானது இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: முஷ்டாக் அலி டி20 தொடர்: கேரளாவை அடித்து நொறுக்கிய தமிழ்நாடு அணி!

ABOUT THE AUTHOR

...view details