இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என வென்று கோப்பையைக் கைபற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை எளிதாக கைப்பற்றயிருந்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அணி தேர்வில் சோதனை முயற்சிகள் செய்கிறோம் என்று இந்திய அணியை தோல்விப் பாதைக்கு அழைத்துசென்று கோப்பையைத் தவறவிட்டனர்.
ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! - twitterati slams ravi shastri
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என தோல்வியடைந்த நிலையில், ரசிகர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என டிவிட்டரில் கருத்திட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடங்கவுள்ள நிலையில், இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக நான்காம் நிலையில் களமிறங்கும் வீரர்களை எந்தவித முன்யோசனையுமின்றி தேர்வு செய்ததாகவும், தோனியை நீக்கிவிட்டு ரிஷப் பந்த்தை வேண்டுமென்றே ஆட வைத்து தோல்வியடந்தனர் என டிவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம். அதனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோபத்தை வெளிப்படுத்து வருகின்றனர்.