டிஎன்பிஎல் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மதுரை பேந்தர்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் அதிரடியான தொடக்கதை தந்தனர். சிறப்பாக விளையாடிய ஜெகதீசன், நிஷாந்த் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
பந்தை சிக்ஸருக்கு விளாசிய ஜெகதீசன் ஜெகதீசன் 50 ரன்களும், நிஷாந்த் 51 ரன்களும் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சத்துர்வேத் மற்றும் மொஹமது ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
aதிரடியாக விளையாடிய சத்துர்வேத் சத்துர்வேத் 13 பந்துகளில் 35 ரன்களையும், மொஹமது 9 பந்துகளில் 32 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. அதன் பின் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது.