தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2020, 7:20 PM IST

ETV Bharat / sports

மேலும் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மேலும் மூன்று வீரர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Three more Pakistan players test positive, ban on training continues
Three more Pakistan players test positive, ban on training continues

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்குச் சென்றடைந்தது.

இதையடுத்து அங்கு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள், அணி ஊழியர்களுக்கு கடந்த நவ.26ஆம் தேதி கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் ஆறு வீரர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையின் நேற்று மீண்டும் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையின் போது, மேலும் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்ட்சர்ச்சில் தங்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் என 46 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவருடைய சோதனை முடிவில் சந்தேகம் இருக்கிறது. இதையடுத்து நான்கு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் ”என்று தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதார மருத்துவ அலுவலர் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தீர்மானிக்கும் வரை, அவர்களின் பயிற்சிக்கான தடை நீட்டிக்கப்படுவதாகவும் நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details