குளோபல் டி20 போட்டியின் 12ஆவது லீக் போட்டியில் யுவராஜ்சிங் தலைமையிலான டொராண்டோ நெஷனல்ஸ் அணியும், காலின் முன்ரோ தலைமையிலான பிராம்டன் வால்வ்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டொராண்டோ நெஷனல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜார்ஜ் முன்சி. அதன் பின் ஆடிய வால்வ்ஸ் அணி ஜார்ஜ் முன்சியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. அந்த அணியின் முன்சி 36 பந்துகளில் 66 ரன்களும், பாபர் ஹயட் 18 பந்துகளில் 48 ரன்களும் விளாசினர்.
பந்தை சிக்ஸருக்கு அனுபிய யுவராஜ் சிங் அதன் பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நேஷனல்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பின் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். இருந்த போதும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பிராம்டன் வால்வ்ஸ் அணி டொராண்டோ நேஷனல்ஸ் அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் வெற்றிக்கு உதவியதால் ஜார்ஜ் முன்சி ஆட்ட நாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.