தமிழ்நாடு

tamil nadu

அனந்த்நாக் மகளிர் கிரிக்கெட் லீக்: இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து கூறிய சச்சின்...!

By

Published : Oct 14, 2020, 10:59 PM IST

அனந்த்நாக் மாவட்டத்தின் தூரு டவுனில் மகளிர் கிரிக்கெட் லீக்கை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளையின் 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் வீரர்களை சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

tendulkar-pathan-hail-indian-army-for-conducting-womens-cricket-league-in-anantnag
tendulkar-pathan-hail-indian-army-for-conducting-womens-cricket-league-in-anantnag

கரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அமல்பத்தப்பட்ட நிலையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் விளையாட்டுக்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக சமூக ஆர்வலர் அமைப்புடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் இணைந்து விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், '' நாக்-அவுட் போட்டிகளாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் லீக் தொடரில் தூரு, அனந்த்நாக், குல்கம் ஆகிய பகுதிகளச் சேர்ந்த 4 அணிகள் பங்கேற்கின்றனர். லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் மொத்தமாக 70 மகளிர் வீராங்கனைகள் பங்கேற்றனர்'' என தெரிவிக்கப்பட்டது.

வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்த லீக் தொடருக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளையின் 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் வீரர்களை சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

அனந்த்நாக் மகளிர் கிரிக்கெட் லீக்

இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், '' இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளையின் 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் வீரர்களுக்கும், அஸீம் தன்னார்வல அமைப்புக்கும் எனது பாராட்டுக்கள். இந்த லீக் தொடரில் பங்கேற்ற அனைத்து மகளிர் வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுக்கள். விளையாட்டில் இருக்கும் அழகு என்னவென்றால் அதற்கு பாலின வேறுபாடு என்பது இல்லை. விளையாட்டு நம்மிடன் திறமையும், கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும். உலகிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் மிகவும் சிறந்தது. யாருக்கு தெரியும், இந்தத் தொடரில் ஆடிய பலரும் இந்திய அணிக்காக பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சார்ஜா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது இல்லை - வாஷிங்டன் சுந்தர்!

ABOUT THE AUTHOR

...view details