சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கணிக்கமுடியாத முடிவுகளை வழங்குவதற்காக போட்டி நடுவர்கள் மற்றும் வீரர்கள் டெசிஷன் ரிவ்யூ சிஸ்டம் (டி.ஆர்.எஸ்) என்ற விதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விதியில் பந்துகள் ஸ்டம்பை லேசாக உரசினால், அதற்கு நடுவர் அவுட் தரவில்லை என்றால் போட்ஸ்மேன் காலத்தில் நீடிக்கலாம் என்ற முறை உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு(ஐசிசி) டி.ஆர்.எஸ் தொடர்பாக ட்விட்டரில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சச்சினின் ட்விட்டர் பதிவில், ' டிஆர்எஸ் விதிமுறைகளில் ஸ்டம்புகளில் பந்தின் எந்த பகுதி உரசினாலும் பேட்ஸ்மேன்களளுக்கு நடுவர் அவுட் கொடுக்க வேண்டும்.ஏனெனில் கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கமே அதுதான். தொழில்நுட்பம் 100 சதவிகிதம் சரியானதல்ல என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் மனிதர்களும் சரியான ஒன்றை கொடுப்பதில்லை.
நான் ஐ.சி.சி உடன் உடன்படாத ஒரே விஷயம், அவர்கள் சில காலமாக பயன்படுத்தி வரும் டி.ஆர்.எஸ் தான். ஏனெனில் அது எல்.பி.டபிள்யூ முடிவின் போது 50 விழுக்காட்டுக்கும் அதிகமான பந்து ஸ்டம்புகளைத் தாக்க வேண்டும் என்பது தான். இதனால் பல சமயங்களில் ஆட்டத்தின் போக்கு மாறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதனால் டி.ஆர்.எஸ்.முடிவில் பந்து ஸ்டம்புகளை தாக்கினால் பேட்ஸ்மேன் வெளியேற வேண்டும் என்பதை கொண்டுவர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.