மும்பை: இந்திய முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தற்போது அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்.
வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்! - வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையிலிருந்து இன்று (ஏப்.8) வீடு திரும்பினார்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," நான் மருத்துவமனையிருந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். தொடர்ந்து தனிமையில் இருக்க முடிவெடுத்துள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னை நன்றாக கவனித்து கொண்ட அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்" என்று சச்சின் பதிவிட்டுள்ளார்.
பரிசோதனையில் அவரது குடும்பத்தினர் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் சச்சின் இந்திய அணிக்கு தலைமையேற்று கோப்பையைப் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.