தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு! - இந்திய அணி தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெறுகிறது.

Team India

By

Published : Jul 21, 2019, 11:05 AM IST

உலகக்கோப்பையை அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.

முதலிரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட் 3, 4ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. மற்ற போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடக்கிறது.

இத்தொடரின் இந்திய அணி இன்று மும்பையில் தேர்வு செய்யப்படுகிறது. இறுதியாக நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால் இந்தத் தொடரில் அணியில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தோனி இந்தத் தொடரில் இடம்பெறவில்லை என்று அறிவித்ததால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்படுகிறார், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு நாள், டி20 போட்டிகளில் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கவுள்ள நிலையில் ரோகித் ஷர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். பின்னர், டெஸ்ட் போட்டிகளில் கோலி, பும்ரா இணைந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஷிகர் தவானுக்கு காயம் சரியாகவில்லை என்பதால் அவருக்கு பதில் மாற்று வீரர் சேர்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details