தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வங்கதேச அணியின் புதிய கேப்டனாக தமிம் இக்பால் தேர்வு! - வங்கதேச அணியின் புதிய கேப்டன்

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மஷ்ரஃபே மோர்டாசா விலகிய நிலையில் அந்த அணியின் புதிய கேப்டனாக தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamim Iqbal replaces Mashrafe Mortaza as new Bangladesh ODI captain
Tamim Iqbal replaces Mashrafe Mortaza as new Bangladesh ODI captain

By

Published : Mar 9, 2020, 9:58 AM IST

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடருடன் வங்கதேச அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து மோர்டாசா பதவி விலகினார். கடந்த ஐந்தாண்டுகளில் 88 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணியை வழிநடத்தி அதில், 50 வெற்றிகளை பெற்றார். 36 தோல்விகளை சந்தித்தார்.

இந்நிலையில், வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர தொடக்க வீரர் தமிம் இக்பால் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 30 வயதான இவர், இதுவரை வங்கதேச அணிக்காக 207 ஒருநாள் போட்டிகளில் 13 சதம், 47 அரைசதம் உட்பட 7202 ரன்களை குவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இவர் 128 ரன்களை எடுத்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் காயம் காரணமாக மோர்டாசா விலகிய நிலையில், தமிம் இக்பால் வங்கதேச அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால், அந்தத் தொடரில் வங்கதேச அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.

இதையும் படிங்க:சச்சினுடன் குத்துச்சண்டை விளையாடும் இர்ஃபான் பதான் மகன்...!

ABOUT THE AUTHOR

...view details