தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் லமிச்சானேவுக்கு கரோனா - டெல்லி கேப்பிட்டல்ஸ்

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேபாள கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சந்தீப் லமிச்சானேவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

T20 journeyman Lamichhane tests positive for COVID-19
T20 journeyman Lamichhane tests positive for COVID-19

By

Published : Nov 28, 2020, 6:07 PM IST

நேபாள் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை.

மேலும் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடரின் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, லமிச்சானே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த லமிச்சானேவின் ட்விட்டர் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களிடம் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளேன். கடந்த புதன்கிழமை முதல் எனது உடல்நிலை சரியில்லை. ஆனால், தற்போது எனது உடல்நிலைநில் முன்னேற்றமடைந்துள்ளது. எனது உடல்நிலை சரியானதும் நான் பிக் பேஷ் சீசனில் பங்கேற்பேன். எனக்காக பிராத்தனை செய்யுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'என்னை மன்னித்துவிடுங்கள் ராகுல்' - வைரலாகும் மேக்ஸ்வெல் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details