இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில், ஒன்றில் இங்கிலாந்து அணியும், மற்றொன்றில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை சமனில் வைத்துள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்விற்கு பதிலாக, துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டாம் கரனிற்கு பதிலாக, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.