தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சயீத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு அணி அறிவிப்பு! - தினேஷ் கார்த்திக்

அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான 30 பேர் அடங்கிய தமிழ்நாடு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Syed Mushtaq Ali Trophy: Karthik, Vijay and Shankar named in TN probables
Syed Mushtaq Ali Trophy: Karthik, Vijay and Shankar named in TN probables

By

Published : Dec 17, 2020, 11:12 AM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் நடத்தவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் மேற்கொள்ளும்படியும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

தமிழ்நாடு அணி அறிவிப்பு

இதையடுத்து இத்தொடருக்கான 26 பேர் அடங்கிய தமிழ்நாடு அணியைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. இதில் கடந்தமுறை அணியை வழிநடத்திய தினேஷ் கார்த்திக் இந்த முறையும் கேப்டனாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

அதேசமயம் நட்சத்திர வீரர்களான முரளி விஜய், ஜெகதீசன், விஜய் சங்கர், முருகன் அஸ்வின் ஆகியோரது பெயர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பெரியசாமி, சிலம்பரசன், சோனு யாதவ், சித்தார்த், யாழ் அருண் மொழி போன்ற இளம் வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அணி: தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அபாரஜித், இந்தரஜித், விஜய் சங்கர், ஷாருக் கான், ஹரி நிஷாந்த், பிரதோஷ் ராஜன் பவுல், அருண் கார்த்திக், ஸ்ரீனிவாசன், ஜெகதீசன், அபினவ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, பெரியசாமி, சந்தீப் வாரியர், ஹரிஸ் குமார், விக்னேஷ், சிலம்பரசன், கௌசிக், சோனு யாதவ், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த், சத்தியநாராயணன், யாழ் அருண் மொழி.

இதையும் படிங்க:ஹோல்டிங் & ப்ரெண்ட்க்கு 'ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன்’ விருது!

ABOUT THE AUTHOR

...view details