பிக் பாஷ் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, ப்ளே சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதன் முதல் ஆட்டமான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் நான்காவது இடம் பிடித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்த்து ஐந்தாவது இடம் பிடித்த சிட்னி தண்டர்ஸ் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி கேப்டன் ஃபெர்குசன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய சிட்னி அணிக்கு கவாஜா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தபோது கவாஜா 54 ரன்களில் ஆட்டமிழக்க, அதையடுத்து ஃபெர்குசன் களமிறங்கினார்.
இதனிடையே அலெக்ஸ் ஹேல்ஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் ஃபெர்குசன் 33 ரன்களில் வெளியேறினார். இறுதியாக சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.