தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிக் பாஷ் லீக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிட்னி சிக்சர்ஸ்! - Big Bash League

மெல்போர்ன்: பிக் பாஷ் லீக் தொடரின் குவாலிஃபயர் சுற்றில் வெற்றிபெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

sydney-sixers-defeat-melbourne-stars-by-43-runs-in-bbl
sydney-sixers-defeat-melbourne-stars-by-43-runs-in-bbl

By

Published : Jan 31, 2020, 7:43 PM IST

Updated : Jan 31, 2020, 7:51 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரின் ப்ளே - ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதன் இரண்டாவது போட்டியான குவாலிஃபயர் போட்டியில் முதலிடம் பிடித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து இரண்டாம் இடம் பிடித்த சிட்னி சிக்சர்ஸ் அணி விளையாடியது. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதால், ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஜோஷ் ஃபிலிப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை களமிறங்கியது. இதில் வின்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஷ் ஃபிலிப் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் - ஹென்ரிஜ்ஸ் இணை நிதானமாக ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 16 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

இறுதி நேரத்தில் ஜோர்டன் சில்க் அதிரடியாக 25 ரன்கள் சேர்க்க சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மேடின்சன் - ஸ்டோனிஸ் இணை களமிறங்கியது. இந்த இணை 15 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோனிஸ் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த நிக் லார்கின் 4 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 26 ரன்களில் மெல்போர்ன் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பானது.

பின்னர் கேப்டன் மேக்ஸ்வெல் - மேடின்சன் இணை நிதானமாக ஆடியது. இந்த இணையைப் பிரிக்க லயன் அழைக்கப்பட, அந்த வேலையை சரியாக செய்துமுடித்தார். லயன் பந்தில் மேடின்சன் 16 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த கோட்ச் 4 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் மேக்ஸ்வெல் 16 ரன்களிலும் பெவிலியன் திரும்பியதால், மெல்போர்ன் அணி பரிதாபமான நிலைக்குச் சென்றது.

கடைசி நேரத்தில் கிளிண்ட் 25 ரன்கள் சேர்க்க இறுதியாக மெல்போர்ன் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் சிட்னி சிக்சர்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: நேபாலில் களமிறங்கும் 'யுனிவர்சல் பாஸ்'

Last Updated : Jan 31, 2020, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details