தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாற்றம் காணுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி! - steve smith

ராஜஸ்தான்: ஐபிஎல் தொடர் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின், தற்போதைய நிலை குறித்து ஒரு சிறிய பார்வை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

By

Published : Mar 20, 2019, 10:08 PM IST

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் தொடங்கியபோது இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை வைத்தே கோப்பையை வென்று ஆச்சரியம் அளித்தது ராஜஸ்தான் அணி. அதன் பிறகு ராஜஸ்தான் அணியால் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொடர்ந்து எட்டு சீசன் ஆடிய பிறகு, மேட்ச் பிக்சிங்கால் ராஜஸ்தான் அணி இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது. அதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று நான்காம் இடத்தில் தொடரை முடித்தது.

இந்நிலையில், இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி இருக்கிறது ராஜஸ்தான் அணி. இளம் வீரர்களுடன் அனுபவ வீரர்களும் கைகோர்த்துள்ளதால் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பார்த்தோமானால், கேப்டன் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஆஷ்டன் டர்னர், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்சர் என மிகப்பெரிய படையுடன் எதிரணியை அச்சுறுத்த காத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தடை முடிந்து அணிக்கு திரும்ப இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் இணைவதால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் நிச்சயம் மிகப்பெரிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இளம் வீரர்களான ராகுல் திரிபாதி, கெளதம் என கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றிகளை தேடி தந்தவர்களும் பங்களிக்க உள்ளது அணிக்கு பலமளிக்கிறது.

ஸ்டீவ் ஸ்மித்

பந்துவீச்சைப் பொறுத்தவரையில், ஜோஃப்ரா ஆர்சர், ஷ்ரேயஸ் கோபால், உனாட்கட், இஷ் சோதி ஆகியோருடன் ஆல்-ரவுண்டர்களான ஸ்டோக்ஸ், கெளதம் என என பெரும்பாலும் இளம் வீரர்களை நம்பியே ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. இந்த அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங்கை மட்டுமே நம்பி களமிறங்குகிறது. பட்லர், ஸ்டோக்ஸ், ரஹானே ஆகியோர் பார்மில் உள்ளதால் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தால் மிகப்பெரிய அணிகளையும் ராஜஸ்தான் அணி எளிதாக வீழ்த்தும். லீக் சுற்றுகளில் சிறப்பாக ஆடினாலும், மற்ற அணிகளை ஒப்பீட்டு பார்க்கையில், ப்ளே ஆஃப் சுற்றில் பங்கேற்கையில் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ச் அணி முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மார்ச் 25-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

ABOUT THE AUTHOR

...view details