மூன்றாவது மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் புனேவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நட்சத்திர வீரராக வலம்வரும் சுமித் நாகல், செர்பியாவைச் சேர்ந்த விக்டார் டிராய்கியுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த சுமித் நாகல், இரண்டாம் செட் போட்டியில் டை பிரேக்கர் முறையில் 7-6 என்ற கணக்கில் போராடி வெற்றிபெற்றார். இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் சுமித் நாகல் 1-6 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதன்மூலம், 2-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியுற்று தொடரலிருந்து வெளியேறினார்.