கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் தொடர் நடந்தது. தொடர்ந்து இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, அப்படியே ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றது.
ஒவ்வொரு தொடருக்கு முன்னதாகவும், கிரிக்கெட் வீரர்கள் பயோ - பப்புல் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பிக் பேஷ் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், '' உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பிக் பேஷ் தொடரில் பங்கேற்பதற்கு சாத்தியமே இல்லை. ஆகஸ்ட் மாதம் முதல் பயோ பப்புள் சூழலில் தனிமையில் இருக்கிறேன். இது இன்னும் எத்தனை நாள்கள் வரை செல்லும் என தெரியாது. தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையில் நிலவி வருகிறது.