இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் 2019 டி20 கிரிக்கெட் தொடர் வரும் 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது சர்வதேச அணிகளில் ஆடும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால், கடந்த ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான போட்டிகளில் பங்கேற்க அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் அணி தங்களது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.